“நவரசம்” புதிய துப்பறியும் திகில் படம் Navarasam
நகரில் ஒரு இளம்பெண் மர்மமான முறையில்
கொலை செய்யப்படுகிறாள். கொலையாளி யார், கொலைக்கான காரணம் என்ன? என்பதை
கண்டுபிடிக்க முயற்சிக்கும்போது, பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின்றன.
இப்படி திருப்பங்களுடன் கூடிய மர்ம படமாக தயாராகி வருகிறது, “நவரசம்.”
“முதன்முதலாய்” படத்தின் மூலம்
அறிமுகமான மகேஷ், இந்த படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகி,
திஷா. முக்கிய கதாபாத்திரத்தில் புதுமுகங்கள் ஸ்ரீதர், தங்கம்,
பாலகிருஷ்ணன், விகடன் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். திரைக்கதையை
மணிகண்டன் எழுத, கதை, வசனம் எழுதி டைரக்டராக அறிமுகம் ஆகிறார்,
எம்.கே.சாந்தாராம். சந்திரன்சாமி ஒளிப்பதிவு செய்ய, சங்கர்
இசையமைத்துள்ளார்.
எம்.கே.எஸ். பிலிம்ஸ், ஆர்.ஆர்.சினி
கிரியேஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. ஊட்டி, கோவை,
மற்றும் கேரளாவில் வளர்ந்த இந்த படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள்
தற்போது நடைபெறுகின்றன.

Making Lot of money in home 100% Secured & free
Comments
Post a Comment