புதிய செயற்திறனுடன் முன்னோக்கிச் செல்லும் டொஷிபா


புதிய மற்றும் பிரதான சற்றலைற் தொடர்களில அதிக செயற்திறன், செல்லிடமெங்கும் கொண்டு செல்லும் வசதி மற்றும் தனிப்பாணி ஆகியவற்றை டொஷிபா அறிமுகப்படுத்துகிறது. 


புதிய சற்றலைற் M800 சற்றலைற் C800, தொடர்கள் சிறந்த செயற்பாங்கு, அனுபவம், மற்றும் விரும்பிய இடங்களுக்கு கொண்டு செல்தல் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது. 

டொஷிபா சிங்கப்பூர் பிரைவேற் லிமிடட், இலங்கையில் உள்ள தமது மொபைல் கொம்பியூட்டிங் பங்காளர்களான ஜோன் கீல்ஸ் ஒஃபிஸ் ஓட்டோமேஷன் ஊடாக, மிகச்சிறந்த அம்சங்களை கொண்டுள்ளதும், அனைவராலும் வாங்கக்கூடியதுமான அதிநவீன M800 சற்றலைற் L800, சற்றலைற் C800 தொடர் நோட்புக் கணணிகளை அறிமுகம் செய்தது. நாளாந்த பாவனைக்கான இந்த புதிய நோட்புக் கணணிகள் சிறந்த பாணியினையும் பல்வகைத் திறன்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதுடன், பரந்தளவு கட்டமைப்பு, காட்சித்திரை அளவுகள் மற்றும் நிறங்களைக் கொண்டுள்ளது.

“டொஷிபா, தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தமைவுத் தொழினுட்பம், சிறந்த செயற்திறன் மற்றும் தமது ஒவ்வொரு தலைமுறை உற்பத்தியிலும் மேம்பட்ட வடிவமைப்பு ஆகியவற்றை வழங்குவதற்காக பாடுபடுகின்றது. புதிய சற்றலைற் 800 தொடர் நோட்புக் கணணியிலும் குறித்த இந்த அம்சங்கள் பிரதிபலிக்கின்றன" என டொஷிபா சிங்கப்பூர் பிரைவேற் லிமிடட், டிஜிடல் புரொடக்ஸ் அன்ட் சேர்விசஸ் குரூப் உற்பத்தி சந்தைப்படுத்தல் சிரேஷ்ட முகாமையாளர் திருமதி. வொங் வாய் மெங்க் அவர்கள் குறிப்பிட்டதுடன். “முந்தைய தலைமுறையிலும் பார்க்க மெல்லியதும், மிகக் குறைந்த எடை கொண்டதுமான இந்த புதிய நோட்புக் கணணிகள் அத்தியாவசியமான சிறப்பம்சங்களை எந்தவித சமரசமும் இன்றி வழங்கும்" என்றார்.

சற்றலைற் M800 தொடர்: சிறந்த வடிவமைப்புடன் கூடிய சக்தி மற்றும் எடுத்துச் செல்லத்தக்க பாங்கு சமமாக இணைந்த சிறப்பம்சங்களுடன்.

திடமான செயற்திறன், செயற்பாடு மற்றும் நவீனபாங்கு ஆகியவற்றை வழங்கும் சற்றலைற் M800 தொடர், சிறந்த சக்தி மற்றும் விரும்பிய இடங்களுக்கு எடுத்துச் செல்லக்கூடிய பாங்கு, சகாய விலை இணைந்த நவநாகரீக மடிக்கணணி ஒன்றை வேண்டுவோருக்கு ஏற்ற மிகச் சிறந்த தெரிவாகும். நவீன 3வது தலைமுறை மற்றும் 2வது தலைமுறை இன்ரெல் கோர் புரோசெசர்களைக் கொண்ட சற்றலைற் M800 தொடர் பல செயற்பாடுகளை ஒரே நேரத்தில் நிறைவேற்றும் தன்நிகரற்ற ஆற்றல், பொழுதுபோக்கு, படைப்பாற்றல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 

நேர்த்தி மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய அடித்தளத்தைக் கொண்ட சற்றலைற் M800 தொடர், தங்கம், இளம்சிவப்பு மற்றும் அடிவான நீலநிறம் கொண்ட தனித்துவமிக்க மெட்டலிக் மிரர் பூச்சினைக் கொண்டுள்ளதுடன், 1.99 கிலோகிராம் எடையுடைய மெல்லிய மற்றும் இலேசான அமைப்பினைத் தருவதுடன் விசாலமானதும், கவர்ச்சிகரமானதுமான டிரெக் பேட், சற்று உயர்ந்த நிலையமைக்கப்பட்ட விசைப்பலகைகள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் விரும்பிய இடங்களுக்குக் கொண்டு செல்லக்கூடிய சௌகர்யத்தை வழங்குகின்றது.

சற்றலைற் C800 தொடர்: அத்தியாவசிய வசதிகள். நடைமுறை செயற்கூறுகள்

மெற் கிராபைட் அல்லது பளபளப்பான இழைம வெளிப்புறப்பூச்சினைக் கொண்டுள்ளதுடன், கறுப்பு கிராபைட், அல்லது சிவப்பு கிராபைட் நிறத்தெரிவுகளுடன் கிடைக்கும் நுழைவு அளவிலான சற்றலைற் C800 தொடர், விலை தொடர்பில் கவனம் செலுத்தும் நுகர்வோர், மாணவர்கள், முதற்தடவை கொள்வனவு செய்வோர் போன்ற அடிப்படை செயற்திறனை எதிர்பார்க்கும் வீடு மற்றும் அலுவலக பாவனைக்கான கணணியினை எதிர்பார்ப்போருக்கு ஏற்ற மிகச் சிறந்த தெரிவாகும். 

டொஷிபா, கண்ணாடிகளின் தேவையற்ற முதன்மை 3D தொழினுட்பத்தைக் கொண்ட புதிய சற்றலைற் P850 கணணிகளையும் அறிமுகம் செய்கின்றது.

புதிய சற்றலைற் P850 தொடர், மெல்லிய, நேர்த்தியான வெள்ளி நிற அலுமினிய கேசிங் கொண்ட நிகரற்ற செயற்திறன், அதிசிறந்த HD பொழுதுபோக்கு, முதன்மை ஒலித்தெளிவு ஆகியவற்றை வழங்குகின்றது.

புதிய சற்றலைற் P850 தொடர் ஹை டெபினிஷன் பவர்ஹவுஸ் பொழுதுபோக்கு ஆனது, நவீன CPU>கிராபிக் புரொசெசிங், சிறந்த வீடியோ மற்றும் ஒலித்தெளிவு ஆகியவற்றை வழங்குகின்றது. முதற்தடவையாக டொஷிபா, விஷேட கண்ணாடிகளின் தேவையற்ற 3னு தொழினுட்பத்தினை தமது சற்றலைற் வர்த்தக நாமத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. குறித்த மாதிரிகள், இருவகை இழைநய அலுமினியம் கேசிங் உடன் கிடைப்பதுடன், மிகச்சிறந்த சக்தி மற்றும் கிராபிக்ஸ் செயற்திறன் கொண்ட கணணியினைத் தேடும் பாவனையாளர்களை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. 

“டொஷிபாவின் சற்றலைற் P850 தொடர் முன்னணி எட்ஜ் புரொசெசிங் தொழினுட்பம், நிகரற்ற ஒலியமைப்பு, உள்ளடக்கம் முதல் ஊடக முகாமைத்துவம் வரை, பிளேபக் முதல் 3D கேமிங் வரை என பரந்தளவான பணிகளை சிறப்பாக நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது" என டொஷிபா சிங்கப்பூர் பிரைவேற் லிமிடட், டிஜிடல் புரொடக்ஸ் அன்ட் சேர்விசஸ் குரூப் உற்பத்தி சந்தைப்படுத்தல் சிரேஷ்ட முகாமையாளர் திருமதி. வொங் வாய் மெங்க் அவர்கள் குறிப்பிட்டார். “மெல்லிய மற்றும் பளுக்குறைந்த வடிவமைப்புடன், உயர் தரம் மற்றும் நீடித்து உழைக்கும் வடிவமைப்பில் அமையப்பெற்றுள்ள இந்த மடிக்கணணிகள், அதிகமதிகம் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு தெரிவாகும்" என அவர் மேலும் குறிப்பிட்டார். 

புதிய சற்றலைற் P850 தொடர் மாதிரிகளின் நேர்த்தியானதும், செவ்வியதுமான வடிவமைப்புகள் அனைவரும் வியக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மூடி மற்றும் அடித்தளம் ஆகியன இழைம அலுமினியத்தினால் உருவாக்கப்பட்ட மற்றுமொரு கண்ணாடி தேவையற்ற 3னு மாதிரியும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது. இந்த உயர்தரப் பொருட்களின் திறனானது, புதிய மாதிரிகளின் வளைந்த முனைப்பகுதியுடன் இணைந்து சிறப்பான தோற்றத்தினை அளிக்கின்றது. அனைத்து சற்றலைற் P850 மாதிரிகளும் ர்னு பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியுள்ளதனால், உயர் தரத்திலான திரைப்படங்கள், இசை மற்றும் கேமிங் அனுபவத்தினை அளிக்கின்றது. 

டொஷிபாவின் ரெசொலியூஷன் + ‘வீடியோ அப்' கொன்வர்ஷன் தொழினுட்பமானது நிறம், பிரகாசம், கொன்ராஸ்ட் ஆகியவற்றை ஒழுங்கமைப்பதன் மூலம், குறைந்த தரமுள்ள வீடியோக்களை ஏறத்தாள உயர்தரத்திலான வீடியோக்களாக தரமுயர்த்தி, HD ஐ ஒத்த தரத்தினை பாவனையாளர்கள் உணர்வதற்கு வழிவகுக்கின்றது. அத்துடன் சற்றலைற் P850 தொடரானது 2D வீடியோக்களுக்கு மற்றுமொரு பரிமாணத்தை அளித்து முப்பரிமாணத்தை சம நேரத்தில் வழங்குகின்றது. சற்றலைற் P850 மாதிரிகளும், HDMI ஊடான 3D வசதி ஏற்படுத்தப்பட்ட தொலைக்காட்சி ஊடாக 3D வீடியோ தரவுகளை நேரடியாக இடையூறற்றுப் பார்ப்பதற்கான வசதியைக் கொண்டுள்ளது. அதியுயர் பேஸ் மற்றும் தெளிவான டிரெபிள் சுற்றயல் ஒலியமைப்பினை தரும் உட்கட்டமைக்கப்பட்ட ஸ்லிப்ஸ்ட்றீம் தொழினுட்பத்துடனான harman/kardon ஸ்ரீயோ ஸ்பீக்கர்கள் குறைந்தளவான கரகரப்புடன் கூடிய, உயர் பேஸ் ஒலித்தெளிவினை வழங்குகின்றது. ப்ரீமியம் SRS சவுன்ட் 3D ஒலி மேம்படுத்தல் தொழினுட்பமானது, பரந்த சூழ் ஒலியினை, இசை, திரைப்படங்கள் மற்றும் கேம்களுக்கு வழங்குகின்றது. 

கண்ணாடிகள் தேவையற்ற 3D தொழினுட்பம் இப்போது சற்றலைற் கணணிகளிலும்

இதற்கு மேலதிகமாக சற்றலைற் P850 மடிக்கணணியானது 15.6" அகலத்திரையில் விஷேட கண்ணாடிகளின் தேவையற்ற முழுமையான HD தெளிவுடன் கூடிய சுப்பர்வியூ 3D காட்சிப்படுத்தலைத் தருகின்றது. குறித்த கருவிகள் உண்மையான 3D காட்சி அனுபவத்தை ப்ளுரே அல்லது டிவிடி களில் பார்க்கும் போதோ அல்லது 3D கேம் ஒன்றை விளையாடும் போதோ விஷேட கண்ணாடியின் தேவையின்றி வழங்குகின்றது. ‘ஐ டிரெக்கிங்| தொழினுட்பமானது பார்வையாளர்கள் காட்சித்திரையின் முன் தலையை அங்கிங்கு அசைக்கும் போது 3D காட்சியை இழக்காமல், தொடர்ச்சியான பார்வை அனுபவத்தை தருகின்றது. 2D மற்றும் 3D காட்சிப்படுத்தலை ஒருங்கே கொண்டிருப்பதால் இந்த மடிக்கணணியில் ஒரேநேரத்தில் 3D திரைப்படம் பார்க்கும் அதேநேரத் இணைய உள்ளடக்கம் ஒன்றை 2D யில் காணலாம். 

டொஷிபா, கேமிங் ஆர்வலர்களின் தேவைக்கேற்ப சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய கொஸ்மியோ X870 கேமிங் மடிக்கணிணிகளையும் அறிமுகம் செய்கின்றது.

கேம் ஆர்வலர்களுக்கான Qosmio X870 தொடர் அதியுயர் செயற்திறன், சிறந்த ஒலித்தெளிவு மற்றும் தனித்துவமிக்க டொஷிபா பிளக்விடோ வெளிப்புறப்பூச்சினையும் வழங்குகின்றது. 

புதிய இந்த மடிக்கணணியானது அதிகமான எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள கேமிங் ஆர்வலர்களுக்கு ஏற்ற வகையில் சிறந்த கேமிங் செயற்திறன், காட்சித்தரம், ஒலியமைப்பு அனுபவம் ஆகியவற்றை வழங்குகின்றது. 3ம் தலைமுறை இன்ரெல் கோர் மற்றும் அதிநவீன கிராபிக்ஸ் புரொசெசர்களின் தொழினுட்பத்தினால் அமைந்த கொஸ்மியோ X870> HD வசதிகொண்ட முழுமையான NVIDIA 3D Vision®  17.3" 3D வசதிகொண்ட காட்சித்திரையுடனும் அதிசிறந்த ஷட்டர் கிளாஸ்களுடனும் கிடைக்கின்றது. புதிய கேமிங் மடிக்கணணியானது 2012 ஜூலை முதல் தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் கிடைக்கும்.

“பவர் பாவனையாளர்கள் டொஷிபா கொஸ்மியோ X870 தொடரின் உயர் செயற்திறன் மட்டம், வலு மற்றும் தனிப்பாணி ஆகியவற்றுக்கு பழக்கமாகியுள்ளார்கள். பெரிய கிராபிக்ஸ் இணைந்த புரொசெசர்களாக இருக்கட்டும், புதிய நவநாகரீக பாணிகள் அல்லது புத்தமைவு தொழினுட்பங்களாக இருக்கட்டும், நாம் அதனை எமது வாடிக்கையாளர்களுக்காகக் கொண்டு வந்து, அதிக கேள்விக்குட்பட்ட பணிகள் மற்றும் தீவிர கிராபிக்ஸ் பயன்பாடுகள் போன்ற வலு, தேவையான துரிதம் ஆகிய அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய விழைகிறோம்" என டொஷிபா சிங்கப்பூர் பிரைவேற் லிமிடட், டிஜிடல் புரொடக்ஸ் அன்ட் சேர்விசஸ் குரூப் உற்பத்தி சந்தைப்படுத்தல் சிரேஷ்ட முகாமையாளர் திருமதி. வொங் வாய் மெங்க் அவர்கள் கூறினார்.

கொஸ்மியோ X870 மாதிரிகள், harman/kardon வர்த்தக நாம ஸ்பீக்கர் க்ரில்களுடன் கூடிய அதிசக்தி கொண்ட 2 x 2 harman/kardon ஸ்ரீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. 

கொஸ்மியோ X870 மாதிரிகளை, எந்தவொரு 3D-TV யுடனும் இணைந்து செயற்படுத்தலாம். HDMI உள்முகமானது, கணணியில் அல்லது ஒப்டிக்கல் டிஸ்க் இல் சேமிக்கப்பட்டுள்ள 3D உள்ளடக்கத்தினை நேரடியாக 3D-TVயில் தொடர்ச்சியாக காட்சிப்படுத்துவதனால், பாவனையாளர்களுக்கு பெரிய தொலைக்காட்சிக் காட்சித்திரைகளில் 3D கேம்கள் அல்லது வீடியோக்களைக் கண்டுகளிப்பதற்கான வசதியைத் தருகின்றது. அத்துடன் கொஸ்மியோ X870 ஆனது 2D உள்ளடக்கத்திற்கு முப்பரிமாணத்தை வழங்கக்கூடியதாக உள்ளதனால், ரென்டர் செய்யப்பட்ட படக்காட்சிகளை இணைக்கப்பட்ட 3D-TVயில் காட்சிப்படுத்துகின்றது.

இழைம தன்மை கொண்ட சிவப்பு மற்றும் ஆழ் வெள்ளி மெட்டாலிக் நிற அலுமினியம் வெளிப்புறமானது கொஸ்மியோ X870 இற்கு அசல் கேமிங் கருவி என்ற அடையாளத்தை அளிக்கின்றது. அடர்சிவப்பு நிற அலுமினியம் ரிம் மற்றும் சிவப்புநிற பின்னொளியுடன் கூடிய கொஸ்மியோ வர்த்தகச் சின்னத்திற்கு மாற்றாக, ஆழ்ந்த சில்வர் மெட்டாலிக் நிறத்தில் அமைந்த தளமானது அதன் முதற்தர தோற்றத்தினை சிறந்த முறையில் வெளிப்படுத்துகின்றது. மெல்லிய கோடுகளுடன் அமைந்த வளைவுகள் சிறந்த பாங்கினையும், சிவப்பு நிற பின்னொளியுடன் அடைந்த விசைப்பலகையானது, இருட்டில் கூட சிக்கலற்ற கேமிங் அனுபவத்தையும் அளிக்கின்றது.

“புதிய டொஷிபா தொடரினை அறிமுகப்படுத்துவதையிட்டு பெருமையடைகிறோம். ஜோன் கீல்ஸ் ஒஃபிஸ் ஓட்டோமேஷன் எந்தவொரு மட்டத்திலுள்ள வாடிக்கையாளருக்கும் புத்தமைவுத் தொழினுட்பத்தை வழங்கும் வகையில் பாடுபடுகின்றது. புதிய இந்த அறிமுகங்கள், அதிக செயற்திறனுடைய கிராபிக்ஸ், அதிகரிக்கப்பட்ட பற்றறி ஆயுள் மற்றும் இன்னும் பல வியத்தகு சிறப்பம்சங்களை நேர்த்தியானதும், எடைகுறைந்ததுமான குறித்த கணணிகளில் கொண்டிருப்பதால், செல்லிட கணணி அனுபவத்தினை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்கின்றது" என ஜோன் கீல்ஸ் ஒஃபிஸ் ஓட்டோமேஷன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனோத தோரதெனிய அவர்கள் குறிப்பிட்டார். 

ஜோன் கீல்ஸ் ஒஃபிஸ் ஓட்டோமேஷன் ஆனது டொஷிபா செல்லிடக் கணணிகளுக்கான பங்காளர்களாக விளங்குவதுடன், நெற்புக்ஸ், பன்முக செயற்திறன் கொண்ட இ-ஸ்ரூடியோ பிரின்டர்கள், ஒப்பந்த அடிப்படையிலான பிரதியீடு செய்யும் கருவிகளை வாடகைக்குத் தரும் சேவைகள் போன்ற பரந்த அளவிலான டொஷிபா வர்த்த தீர்வுகளையும் சேவைகளையும் வழங்குகின்றது. இலங்கையில் ஒஃபிஸ் ஓட்டோமேஷன் தீர்வு வர்த்தகத்தில் ஜோன் கீல்ஸ் ஒஃபிஸ் ஓட்டோமேஷன் நிறுவனமே முன்னிலை வகிக்கின்றது. 

டொஷிபா நோட்புக்குகளின் வியத்தகு தரம் அதன் சாத்தியங்களை வெளிப்படுத்துகின்றது. புதிய, புத்தமைவு தொழினுட்பங்கள் தொடர்ச்சியாக கண்டுபிடிக்கப்பட்டு வரும் இவ்வேளையில், டொஷிபா, வாடிக்கையாளர்களின் தேவை குறித்து கவனம் செலுத்துவதுடன், மேம்பட்ட கிராபிக்ஸ், நேர்த்தியான செயற்திறன் போன்ற புதிய அம்சங்கள், தரமுயர்த்தல்கள் ஆகிய கணணித் துறையில் மிகச் சிறந்தவற்றை புதிய நோட்புக்குகளின் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. 

பெருமைமிகு டொஷிபா வர்த்தக நாமத்துடன் இணைந்து செயலாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சியடையும் அதேவேளை, உலகின் சிறந்த வர்த்தக நாமங்களில் ஒன்றான டொஷிபா மற்றும் இலங்கையில் 400 ற்கும் மேற்பட்ட நிலையங்களுடன், பரந்த சேவை வலையமைப்பைக் கொண்டுள்ள அபான்ஸ் ஆகியவற்றின் ஒன்றிணைவானது தகவல் தொழினுட்ப வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த அனுகூலங்களை அளிக்கும் என நம்புகின்றேன்" என்று அபான்ஸ் பணிப்பாளர் திரு. ரிற்றோ பெஸ்டொன்ஜீ தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

மிரட்டல் - விமர்சனம்

Samsung Galaxy S4 full review

Zurker - இணையத்தில் சம்பாதிக்க அழைக்கும் சமூக வலைத்தளம்