உலகை உலுக்கும் பிரெஞ்சு வார இதழின் படம்!!!! (சிறுவர்கள் பார்ப்பதைத் தவிர்க்கவும்)
![]()
இங்கிலாந்தின் முடி வாரிசுகளும் கேம்ப்ரிட்ஜ் இன் இளவரசர்களுமான வில்லியம் மற்றும் கேட்டின் அந்தரங்கப் படங்களை பிரான்சின் CLOSER சஞ்சிகை வெளியிட்டுள்ளது. 'கடவுளே! இப்படங்கள் உலகம் முழுவதும் சுற்றப் போகின்றதே!' (Oh MY God ! Les photos vont faire le tour de monde)) என்ற தலைப்புடன் மிகவும் நீண்ட தூரத்திலிருந்து எடுத்த புள்ளிகள் விழுந்த படத்தை வெளியிட்டுள்ளனர்.
இதில் Kate Middleton இடுப்பில் மட்டும் சிறு ஆடையுடன் மேற்பகுதி ஆடையில்லாமல் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல அந்தரங்கப் படங்களை இச் சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இத் தம்பதிகள் தற்போது மலேசியாவில் உள்ளனர். இச்செய்தி வில்லியமைப் பெரிதும் கோபத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியிருக்கின்றது என்று கூறப்படுக்கின்றது.
![]()
பிரித்தானிய அரச பீடம் மிகவும் கவலை அடைந்ததுடன் இதற்கெதிரான சட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் பக்கிங்காம் மாளிகை இப்படங்கள் உண்மையானவை என்பதனையும் உறுதிபபடுத்தியுள்ளது. இத் தம்பதிகள் தமது விடுமுறையைப் பிரான்சின் தெற்குப் பகுதியில் உள்ள பிரித்தானிய அரசியின் மருமகன் Lord Linley ற்குச் சொந்தமான Château d'Autet மாளிகையில் கழித்தனர்.
![]()
இம்மாளிகையில் அவர்கள் உல்லாசமாகப் பொழுதைக் கழித்ததை, அவர்களது தனிமையை இரகசியமாகப் படம் பிடித்துள்ளனர். அது மட்டுமல்லாது அதனைச் சஞ்சிகைகளிலும் வெளியட்டுள்ளனர். இச் சஞ்சிகை தனது எல்லையைத் தாண்டி ஆபத்து எல்லைக்குள் நுழைந்துள்ளதாக பக்கிங்காம் மாளிகை எச்சரித்துள்ளது.
கடந்த வாரம் இளவரசர் சார்ல்சின் இரண்டாவது வாரிசு ஹரியின் நிர்வாணப் படத்தை பிரித்தானியப் பத்திரிகை வெளியிட்டிருந்தது. அதில் ஹரியும் ஒரு பெண்ணும் நிர்வாணமாக இருக்கும் படம் வெளியிடப்பட்டிருந்தது. அந்த அதிர்சியைப் போக்க உடனடியாக ஹரியை ஆப்கானிஸ்தான் போர்க்களத்திற்கு இராணுவத்தோடு அனுப்பிவைத்துப் பிரச்சனையைத் திசை திருப்ப முயலும் சமயத்தில் பிரித்தானிய இராஜ பரம்பரைக்கு மேலும் புதிய சிக்கலை இச் சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியையும் ஊடகம் மீது பிரித்தானிய அசரபரம்பரை எடுக்கப் போகும் நடவடிக்கையையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
|



Comments
Post a Comment