கோச்சடையான் ஒளிபரப்பு உரிமை: சாதனை விலையில் ஜெயா தொலைக்காட்சி வசம்


சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள முப்பரிமாண படமான கோச்சடையான் திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை ஜெயா தொலைக்காட்சி மிகப்பெரிய தொகை கொடுத்து தன்வசப்படுத்தியுள்ளது இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான ஈரோஸ் மற்றும் வன் குளோபன் உறுதிப்படுத்தியுள்ளது. 


ரஜினி, தீபிகா, சரத்குமார், நாசர், ஜாக்கி ஷெரோப் என நட்சத்திர பட்டாளங்களுடன் களமிறங்கவுள்ள கோச்சடையான் திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமையை வாங்க அனைத்து தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களும் போட்டி போட்டன இறுதியில் இந்திய சினிமாவில் எந்தப் படத்துக்கும் இல்லாத அளவுக்கு பெரும் விலை கொடுத்து ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் கோச்சடையானின் ஒளிபரப்பு உரிமையை தனதாக்கிக்கொண்டுள்ளது. 

மேலும் ஹிந்தி மற்றும் தெலுங்கு ஒளிபரப்பு உரிமைக்கு தற்போது சீ, சொனி மற்றும் ஜெமினி தொலைக்காட்சிகள் மோதி வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.

Comments

Popular posts from this blog

Samsung Galaxy S4 full review

ஸ்ரேயா அதிரடி “கவர்ச்சி இல்லாமல் என் படம் இல்லை”

Windows 8.1 Release To Manufacturing (RTM) Finalized, Will Be Available On October 17th