புதிய பஜாஜ் பள்சரின் விசேடங்கள் என்ன? தொழில்நுட்ப அலசல்


இந்தியாவின் முன்னனி மோட்டார் நிறுவனமான பஜாஜ், தனது தயாரிப்பான ”பள்சர் 200NS” ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட பள்சர் 220 இல் சிறு சிறு தவறுகள் தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையிலேயே இப் புதிய பள்சர் வெளியிடப்பட்டுள்ளது.
இப் புதிய பள்சர் 200NS, பிரபல BMW நிறுவன மோட்டார் சைக்கிள்களான BMW S1000RR மற்றும் BMW R1200GS ஆகியவற்றை வடிவமைத்த Mr. Edgar Heinrich என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளமை முக்கிய விடயமாகும்.
பிரபல ஸ்போர்ட்ஸ் பக் ஆன KTM Duke 200 இன் எஞ்சின் வடிவமைப்பை மையப்படுத்தி பள்சர் 200 இன் எஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவ் பைக்கின் பிரதன உடல் சட்டகம் உறுதியான அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
எஞ்சினை குளிர்மைப்படுத்துவதற்காக திராவக குளிர்மை நுட்பம் ( liquid cooled Teck) பயன்படுத்தப்பட்டுள்ளது. இந் நுட்பம், அதி வேகத்திலும், பைக்கின் எஞ்சின் சீராக இயங்க உதவும்.
இதுவரை பஜாஜ் பள்சர்களில் Twin Spark தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டு வந்தது. புதிய பள்சரில் Triple Spark தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ( Triple Spark தொழில்நுட்பம் என்பது மூன்று எரி பிளக்குகளால் எரிபொருள் எரியூட்டப்படுவதை குறிக்கிறது)
23.17 bhp வலு இயந்திரம் அதி சிறந்த ஸ்போர்ட்ஸ் அனுபவத்தை அளிக்கக்கூடியது.
அத்துடன் ஒரு லீற்றர் பெற்றோலில் 58 கிலோமீற்றர்கள் ஓடக்கூடியது.
ஆறு கியர் காணப்படுகிறது, முன், பின் சக்கரங்கள் இரண்டிற்கும் டிஷ் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.
monocross அதிர்வு தாங்கிகள் சீரான ஓட்டத்தை உறுதிப்படுத்தும்.
இப் புதிய பள்சரின் விலை 85000 இந்திய ரூபாய்கள் என்பது மகிழ்ச்சியான விடயம்.
இப் புதிய பஜாஜ் பள்சர் 200NS சந்தையில் நல்ல வரவேற்பை பெறும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Comments

  1. வணக்கம் நண்பரே!

    உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் தற்போது இணைக்கலாம். உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் subject பகுதிக்குள்ளும் உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும்(url) மின்னஞ்சலின் Body பகுதிக்குள்ளும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். தன்னியக்கமுறையில் உங்கள் பதிவுகள் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாவதோடு அதிக வாசகர்களையும் சென்றடையும்.

    தங்கள் பதிவுகளை எதிர்பார்த்து
    யாழ் மஞ்சு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

The best mobile phones in 2013 to buy Full reviews

Anjali யின் நடத்தையில் சந்தேகம் – தீவிரமாக கவனிக்கிறார் தாய்குலம்!

How iOS 7 Style Calculator Get On Android App