கமல் மகளுக்கும் பாலிவுட் நடிகருக்கும் நட்பா ? காதலா ?
அக்ஷராவுக்கும் பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாமகன் விவானுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா, மும்பையில் தாய் சரிகாவுடன் வசிக்கிறார்.அக்ஷராவுக்கும் பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ரூதீன் ஷா மகன் விவானுக்கும் காதல் மலர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விவான் பாலிவுட்டில் விஷால் பரத்வாஜின் 'சாத் கூன் மாஃப்" என்ற படத்தில் நடித்துள்ளார். ஆனால் இவர்களின் நட்பு வெளிச்சத்திற்கு வராமல் இருந்தது. ஆனால் இவர்கள் இவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்றதையடுத்து இவர்களுக்கு இடையிலான தொடர்பு அம்பலமானது. கடந்த மார்ச் மாதம் அக்ஷராவுக்கு நடந்த பிறந்த நாள் விழாவில் விவான் கலந்துகொண்டார். இதே விழாவில் கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசனும் பங்கேற்றார். நெருங்கிய நடிகர்கள் தவிர அக்ஷரா, விவான் நட்பு வேறு யாருக்கும் தெரியாதாம். இதுபற்றி விவான் கூறும் போது எனக்கு காதலி என்று யாரும் கிடையாது. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இதேபோல் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நான் இன்னும் தனி ஆளாகத்தான் இருக்கின்றேன் என்று கூறி அனைவரும் போல தப்...