விஜய் ஜோடி சுருதிஹாசன் இல்லை


கவுதம் மேனன் இயக்கவுள்ள படம் 'யோவான் அத்தியாயம் ஒன்று" விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கொலிவுட்டில் கூறப்படுகின்றது. 

இது குறித்து இயக்குனர் கவுதம் மேனனிடம் கேட்டபோது, ஸ்ருதி ஹாசனிடம் இதுபற்றி எதுவும் பேசவில்லையென்றும் உண்மையாக விஜய்க்கு ஜோடியாக யார் என்பது இன்னும் முடிவாகவில்லையென்றும் கூறப்படுகின்றது. 


இப்படத்திற்கு இன்னும் பல நடிகர்களைத் தேர்வு செய்யவேண்டியுள்ளதுடன் விஜயிடம் மெலிய வேண்டும் என்று கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். யோவான் தமிழுக்கு முற்றிலும் ஆக்~ன் த்ரில்லர் படமாக இருக்கும். இப்படப்பிடிப்பு பெர்லினில் நடக்கவிருப்பதாகவும், இதுதவிர பல்வேறு நாடுகளில் படமாக்க உள்ளதென்றும், ஹாலிவுட் நடிகர்கள் சிலரும் நடிக்கவுள்ளார்கள் என்றும் மேனன் தெரிவித்துள்ளார். 

இது பற்றி சுருதிஹாசனிடம் கேட்டபோது அது உண்மை இல்லை, யோவான் படத்தில் நடிப்பதுபற்றி இதுவரை எவரும் என்னிடம் பேசவில்லை. இப்போதுள்ள நிலையில் நான் கைநிறையப் படங்களுடன் நடித்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

புதிய செயற்திறனுடன் முன்னோக்கிச் செல்லும் டொஷிபா

How to install OS X Mountain Lion Hackintosh on PC [Tutorial]

உலகின் மிகப்பெரிய கணனித் தயாரிப்பு நிறுவனம் லெனோவோ: எச்.பியை பின் தள்ளியது