புதுவீட்டில் பிரபுதேவா !


  பிரபுதேவா கூடியவிரைவில் கிரீன் ஏக்கர்ஸ் வீட்டில் குடியேறவுள்ளார். 

பிரபுதேவா போக்கிரி படத்தை இந்தியில் சல்மான்கானை வைத்து வாண்டட் என்ற பெயரில ரீமேக் செய்திருந்தார். அந்தப் படம் பல கோடி ரசிகர்களைக் கவரும் வகையில் சாதனை படைத்துத் தந்தது. 


இதனைத்தொடர்ந்து கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இந்தியில் அக்~ய் குமாரை வைத்து ரவுடி ரத்தோர் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அப்படமும் வசூலை அள்ளிக் குவித்து சாதனை படைத்தது. இதனால் பிரவுதேவாவுக்கு பாலிவுட்டில் பயங்கர எதிர்பார்ப்பு. பிரபுதேவா தொடங்கும் படம் தோல்வியில் முடிவதில்லை என்று நினைக்கும் அளவிற்கு புகழைத்தேடிக்கொண்டு விட்டார். இதனால் மும்பையிலே தங்க முடிவு செய்துள்ளார். அவர் வீடுதேடி அலைந்த போது ஸ்ரீதேவியும், அவரது கணவரும் அவர்களது கிரீன் ஏக்கர்ஸ் வீட்டில் தங்கும்படி கூறியுள்ளனர். இதனை ஒப்புக்கொண்டுவிட்டார் பிரபு தேவா. 

இதன் காரணம் தான் புரியவில்லை. ஸ்ரீதேவியும் தன்னுடைய மகளை திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்காக போராடிவருகின்றார். பழம் நழுவிப் பாலில் விழுந்து விட்டது 


Comments

Popular posts from this blog

புதிய செயற்திறனுடன் முன்னோக்கிச் செல்லும் டொஷிபா

How to install OS X Mountain Lion Hackintosh on PC [Tutorial]

உலகின் மிகப்பெரிய கணனித் தயாரிப்பு நிறுவனம் லெனோவோ: எச்.பியை பின் தள்ளியது