நடிகை டாப்ஸிக்காக அடிதடி
சென்னையில் கடந்த 7ஆம் திகதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிலிம்பேர் விருது வழங்கும் விழா நடந்தது. அந்த விழா முடிந்தவுடன், சினிமா வட்டாரத்துக்கு நெருக்கமான தொழில் அதிபர் ஒருவர் தனது பிறந்த தினத்திற்காக இரவு விருந்துக்கு சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அவது கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்திருந்தார். அவ்வேளையில் நடிகர் மகத்தும், மஞ்ச் மனோஜூம் அடிதடியில் இறங்கியுள்ளனர். இதன் காரணம் நடிகை டாப்ஸி யாருக்குச் சொந்தமானவள் என்பதாம்.
இந்த மோதலானது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நடிகை டாப்சியை யார் காதலிப்பது என்பதில்தான் இவர்களுக்குள் இந்த மோதல். இது குறித்து டாப்ஸியிடம் கேட்டபோது அவர் ஒன்றும் கூறாது சென்று விட்டார்.
Comments
Post a Comment