Office 2013ற்கான டெமோவை வெளியிட்டது மைக்ரோசொப்​ட் ..



முன்னணி மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான மைக்ரோசொப்ட் தனது MS Office மென்பொருள் பொதியின் 2013 பதிப்பை விரைவில் அறிமுகப்படுத்துப்படவுள்ளது.
இதன் அடிப்படையில் MS Office இன் முன்னைய பதிப்புக்களிலிருந்து தற்போது வெளிவரவுள்ள Office 2013 பதிப்பில் காணப்படும் புதிய அம்சங்கள் தொடர்பாக பயனர்களுக்கு விளக்கும் முகமாக தனது டெமோவினை வெளியிட்டுள்ளது.
இவை இந்த வருட இறுதியில் முழுமையாக வெளிவரவுள்ள விண்டோஸ் 8 இயங்குதளத்திலும் பயன்படுத்தக்கூடியவாறு மெட்ரோ பயனர் இடைமுகத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய பதிப்பான Office 2013இல் ஒன்லைனிலிருந்து படங்களை உட்புகுத்திப் பயன்படுத்த முடிவதுடன் பயனர் இடைமுகத்தை மாற்ற முடிதல் போன்ற பல்வேறு புதிய அம்சங்களுடன் களமிறங்கக் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


முகப்பு

Comments

Popular posts from this blog

புதிய செயற்திறனுடன் முன்னோக்கிச் செல்லும் டொஷிபா

How to install OS X Mountain Lion Hackintosh on PC [Tutorial]

உலகின் மிகப்பெரிய கணனித் தயாரிப்பு நிறுவனம் லெனோவோ: எச்.பியை பின் தள்ளியது