சுந்தர பாண்டியன் – திரை விமர்சனம்


சுப்ரமணியபுரம் எனும் உலக சினிமா மூலம் நல்ல இயக்குநராகவும், நாடோடிகள்-போராளி மூலம் நல்ல நடிகராகவும் தன்னை நிரூபித்த சசிக்குமார், வழக்கமாக சமுத்திரக்கனி படத்தில் மட்டுமே ஹீரோவாக நடித்து வந்த சசிக்குமார், முதல்முறையாக வேறு இயக்குநர் இயக்கத்தில் நடித்து இன்று வெளியாகியிருக்கும் படம் ‘சுந்தர பாண்டியன்’.
ஒரு ஊர்ல…………………:
கதை தேனி மாவட்ட கிராமங்களில் நடக்கிறது. உசிலம்பட்டிப் பெண்ணான ஹீரோயின் ‘கும்கி’ லட்சுமி மேனன் கம்பம் பகுதிக் காலேஜில் படிக்கிறார். பஸ்ஸில் போய் வரும் அவரை சசிக்குமாரின் நண்பன் – அப்புக்குட்டி இருவரும் ரூட் விட, உதவி செய்யப்போன சசிக்குமாருக்கே அதிர்ஷ்டம் அடிக்கிறது.
அதையடித்து நடக்கும் ஒரு அடிதடியில், ஒருவர் உயிரிழக்கிறார். சசிக்குமார் கொலைகாரனாக ஜெயிலுக்குப் போகிறார். உயிரிழந்தவர் சசியின் மற்றொரு நண்பனின் நண்பன். ஹீரோயின் யார் என்றால், சசியின் மற்றொரு நண்பனின் முறைப்பெண்(மச்சினி).
ஆக, மூன்று நண்பர்களுக்கும் வில்லன் ஆகிறார் சசி. அப்புறம் என்ன….ஜெயில்ல இருந்து வந்தாரா, ஹீரோயினைக் கை(யையும்)ப் பிடித்தாரா?, மூன்று நண்பர்கள் என்ன செய்தார்கள், பதிலுக்கு சசிக்குமார் என்ன செய்தார் என்பதே கதை.


திரைக்கதை :
முதல்பாதி முழுக்க சசிக்குமார்-சூரி காம்பினேசனில் காமெடி களைகட்டுகிறது. ஹீரோயின் காலேஜ் செல்லும் பஸ்ஸிலேயே பெரும்பகுதி நகர்கிறது. ஆனாலும் சூரியின் இயல்பான ஒன்லைன்டயலாக்ஸ்களால் முதல்பகுதி தப்பிக்கிறது.
ஆனால் இரண்டாம் பகுதியில் தான் என்னென்னவோ நடக்கிறது. ட்விஸ்ட் வைக்கிறேன் பேர்வழி என படம் முழுக்க ஏகப்பட்ட க்ளூக்களுடன் ஏகஏகப்பட்ட ட்விஸ்ட்கள்..பாண்டி நாட்டுத் தங்கம், பாண்டித்துரை மாதிரிப் படங்கள் வந்த காலகட்டங்களில் வேண்டுமானால், இந்தப் படம் ‘பயங்கர’ ட்விஸ்ட்டுகள் நிறைந்த கிராமக்காவியமாக ஆகியிருக்கலாம். ஆனால் உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கும்போது, கிராமப்படங்களில்கூட பருத்திவீரன் – சுப்பிரமணியபுரம் என தமிழ்சினிமா தரத்தில் எவ்வளவோமுன்னேறிவிட்ட காலகட்டத்தில், இந்தப் படம் ரொம்பப் பழசாகவே தெரிகிறது.
நண்பனின் காதலுக்கு உதவ, சசிக்குமார் இறங்கும்போதே ஹீரோயின் ஹீரோவுக்குத் தான் எனும் உலகமகா ரகசியம் நமக்குத் தெரிந்துவிடுகிறது. அதில் இருந்து படத்தில் அடுத்தடுத்து என்ன வரும் என்று எளிதாக யூகிக்க முடிகிறது. கொலை நடக்கும்போது, அதை சரியாகக் காட்டாததிலேயே ட்விஸ்ட் புரிந்துவிடுகிறது. நண்பன் தான் அடியாள் வைத்து அடித்தது என்றும்
தெளிவாகவே தெரிந்துவிடுகிறது. பாசக்கார அப்பாக்களின் கேரக்டரைசேசனிலேயே, ஹீரோ ஹீரோவுடன் சேருவதில் பிரச்சினை இல்லையென்றும் புரிந்துவிடுகிறது.
படத்தை எப்படியாவது முடிக்கவேண்டுமே என நண்பர்கள்-துரோகம் என சுப்பிரமணியபுரம் ஸ்டைலில் ஒரு கிளைமாக்ஸ் வைத்து, ஒருவழியாக நம்மை முடித்து அனுப்பி வைக்கிறார்கள்.
சசிக்குமார் :
நல்ல நடிகராக சசி, தன்னை இதிலும் நிரூபிக்கிறார். கல்யாணமான அத்தை பெண்ணை கலாய்ப்பதாகட்டும், சூரியுடன் அடிக்கும் லூட்டிகளாகட்டும் மனிதர் கேஷுவலாக கலக்கியெடுக்கிறார்.
கண்களில் குறும்பும், காதலும், கோபமும் கொப்பளிக்கிறது. என்ன ஒன்னு…நல்ல கதை தான் அவருக்குக் கிடைக்க மாட்டேன் என்கிறது.

ஹீரோயின் :
அப்பாடி…………..பில்லா-2, முகமூடி என தொடர்ந்து குஜிலீஸையே பார்த்து நொந்துபோன கண்களுக்கு குளிர்ச்சியாக, ஹோம்லி லுக்கில் கேரளத்துப் பெண்குட்டி ‘கும்கி’ லட்சுமிமேனன் அறிமுகமாகியிருக்கிறார். ’கும்கி’ லட்சுமி என்றதும் என்னவோ ஏதோ என கண்டபடி கற்பனை பண்ண வேண்டாம்..கும்கி என்பது அவர் முதலில் நடித்து, அடுத்து வெளிவர இருக்கும் படம்.
ரொம்ப நாளைக்கு அப்புறம், நடிக்கத் தெரிந்த ஹீரோயினைப் பார்ப்பது சந்தோசமாக இருக்கிறது. பலதரப்பட்ட எக்ஸ்பிரசனையும் காட்டும் தென்னிந்திய முகம்.  ஹீரோயின் பெரிய அழகி இல்லை. சராசரி தான். ஆனாலும் ’அந்த’ உலக அழகியை ஒப்பிடும்போது, இவர் எவ்வளவோ பெட்டர்.
’புரோட்டா’சூரி :
படத்தை ஜாலியாக நகர்த்துவது, இவர் பேசும் வசனங்கள் தான்..ஒரு சாதாரண கிராமத்தானாக, அவர் பேசும் கேஷுவலான வசனங்கள் நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன. பெரும்பாலும்டைமிங் காமெடி தான். இனிமேலாவது தமிழ்சினிமா இவரை சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாஸிடிவ் பாயிண்ட்ஸ்:
- ரொம்ப நாள் கழித்து வந்திருக்கும், நல்ல கிராமத்து மணம் கமழும் படம்.
- கேட்க இனிமையான பாடல்கள். (அறிமுக இசையமைப்பாளர் ரகுநாதன்)
- அனைத்து நடிகர் தேர்வும், அவர்களின் நடிப்பும் அருமை.
- இயல்பான மதுரைத் தமிழும், காமெடி டயலாக்ஸும்
- லொக்கேசன் தேர்வு அருமை
- ஆரம்பக் காட்சிகளில், தமிழ்சினிமா மறந்துவிட்ட ‘ஜாதிப் பெருமை’ வசனங்கள் வருமோ என பயப்பட வைத்து, அப்படி எதுவும் இல்லாமல், இயல்பான கிராமத்தைக் காட்டியது.

நெகடிவ் பாயிண்ட்ஸ் :
- இடைவேளைக்கு அப்புறம், தறிகெட்டு அலையும் கதை/திரைக்கதை
- சுமாரான, அரதப்பழசான ட்விஸ்ட்கள்.
- எளிதில் யூகிக்க முடியும் திரைக்கதை
-  கிளைமாக்ஸ் சண்டை!
அப்புறம்….:
- ரகுநாதனின் இசையில் காதலைப் பற்றி வரும் பாடல் அருமை. ’காதலுக்கு காதலிக்கத் தெரியாது’ போன்ற வரிகள் அட்டகாசம்.
-   இதுக்கு மேல சொல்றதுக்கு பெருசா, ஒன்னும் இல்லை பாஸ்!
பார்க்கலாமா? :
-  ஒரு தடவை! (வேற வேலை வெட்டி இல்லேன்னா………….)
Thanks To செங்கோ 

Comments

Popular posts from this blog

மிரட்டல் - விமர்சனம்

Samsung Galaxy S4 full review

Zurker - இணையத்தில் சம்பாதிக்க அழைக்கும் சமூக வலைத்தளம்