சூப்பர் ஸ்டார் ரஜனிக்கும் சன் டிவிக்கும் என்ன பிரச்சினை?


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நடிப்பில் உருவாகியுள்ள கோச்சடையான் படத்தை வாங்க சன் டிவி நிறுவனம் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை எந்தப் புதிய படம் எடுத்தாலும் அதை முதலில் சன் டிவிக்கு விற்று விட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள் பல தயாரிப்பாளர்கள்.
பலர் படத் தயாரிப்பின்போதே சன் பிக்சர்ஸிடம் விற்ற செய்திகளும் நிறைய வந்தன. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது.
புதுப் படம் எதுவுமே சன்டிவிக்குப் போவதற்குத் தயங்குகிறதாம். காரணம் ஜெயா டிவி இப்போது பெரும் பணத்தைக் கொடுத்து புதுப் படங்களை வாங்கத் தயாராக இருப்பதால்.
அத்துடன் ஆட்சி வேறு ஜெயா டிவிக்கு சாதகமாக இருப்பதாலும், தயாரிப்பாளர்கள் தரப்பு ஜெயா டிவிக்கே படங்களைக் கொடுக்க முன் வருகிறார்களாம்.
இதனால் சன் டிவிக்கு சமீப காலமாக புதுப் படங்கள் எதுவுமே வராத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கோச்சடையான் படத்தை வாங்க சன் டிவி அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.
ஜெயா டிவியுடன் போட்டியிட விரும்பாததை ஒரு காரணமாகக் கூறினாலும், இன்னொரு முக்கியக் காரணத்தையும் கூறுகிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.
அதாவது கோச்சடையான் ஒரு அனிமேஷன் படம் என்பதால்தான் சன் டிவி அதை வாங்கத் தயக்கம் காட்டியதாம்.
வழக்கமான ரஜினி படங்களுக்கும், இதற்கும் நிச்சயம் வித்தியாசம் இருக்கும். இதை ரசிகர்கள் நிச்சயம் வேறுபட்ட படமாகத்தான் பார்ப்பார்கள்.
ஒரு முழு நீள ரஜினி படமாக இது இருக்க வாய்ப்பில்லை என்பது சன் டிவியின் கருத்தாம். இதனால்தான் கோச்சடையானை வாங்க அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறுகிறார்கள்.
முதலில் சன் டிவியைத்தான் கோச்சடையான் தயாரிப்புத் தரப்பு அணுகியதாம். ஆனால் அவர்கள்தான் விருப்பமில்லை என்று கூறி விட்டார்களாம்.
அதன் பிறகே ஜெயா டிவி வந்து கேட்டதாம். பெரும் விலை பேசி வியாபாராத்தை முடித்தார்களாம்.

Comments

Popular posts from this blog

மிரட்டல் - விமர்சனம்

Samsung Galaxy S4 full review

Zurker - இணையத்தில் சம்பாதிக்க அழைக்கும் சமூக வலைத்தளம்