Zurker - இணையத்தில் சம்பாதிக்க அழைக்கும் சமூக வலைத்தளம்



சமூக வலைத்தளங்கள் இன்றி இன்று இணையமே இல்லை என்று சொல்லி விடலாம். அத்தனை நல்லது, கெட்டதுகளும் அதில் தான் நடக்கின்றன. பேஸ்புக், கூகுள் பிளஸ், ட்விட்டர், தொலைந்து போன ஆர்குட் வரிசையில் புதியதாக வந்துள்ள தளம் தான் Zurker. மற்றவற்றை போல அல்லாமல், அங்கே இணையும் ஒவ்வொருவரையும் தன்னுடைய பங்குதாரர் ஆக இணைத்துக் கொள்கிறது. அது பற்றி இன்று பார்ப்போம். 

Zurker என்றால் என்ன? 

2011 ஆம் டிசம்பரில் நிக் ஒபா உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளம் இது. இது இப்போது Beta Level - இல் இருக்கிறது. அழைப்பு இருப்பவர்கள் மட்டுமே இணைய முடியும். 

யாரால் இயக்கப்படுகிறது ?

இது முழுக்க முழுக்க இதன் உறுப்பினர்களால் இயங்குகிறது. ஆம் தன்னுடைய தளத்தில் உறுப்பினராய் இணையும் ஒவ்வொருவரையும் இது தன்னுடைய பங்குதாரராய் எடுத்துக் கொள்கிறது. 

எப்படி இதன் மூலம் சம்பாதிப்பது ?

நீங்கள் இந்த தளத்தில் தளத்தில் இணைந்தால், உங்கள் நண்பர்களை Refer செய்தால் நீங்களும் இதன் மூலம் சம்பாதிக்க முடியும். 

நீங்கள் பரிந்துரைக்கும் ஒவ்வொரு நண்பரும் இணையும் போது உங்களுக்கு ஒரு vShare எனப்படும் Virtual Share கிடைக்கும். ஒரு vShare ஆனது Zurker தளத்தின் 1/1,000,000th ஓனர்ஷிப்க்கு சமமானது. இந்தக் கணக்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு. இந்தியாவில் இது மாறுபடலாம். ஆனால் வருமானம் உறுதி. 

நீங்கள் கேட்கலாம், இது MLM போன்று உள்ளதே என. ஆனால் ஒருவர் Referral மூலம் 500 vShares மட்டுமே பெற இயலும். அதற்கு மேல் நபர்களை அழைக்க முடியாது. அதற்கு மேல் அதில் வருமானம் என்பது வேறு வழிகளில் என்று சொல்லப்படுகிறது. அது குறித்த தகவல்கள் தளம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது தெரிய வரும். 


இதில் சென்று Join The Fun என்பதை கிளிக் செய்து இணையவும். 


இணையும் பொழுது ஒரு மிருகத்தின் படத்தைக் கொடுத்து அதன் பெயரை Type செய்ய சொல்லி கேட்கும். மிருகத்தின் பெயர் தெரியவில்லை என்றால் அந்த படத்தை Download செய்து Google Image Search -இல் கேமரா icon மீது கிளிக் செய்து "Paste image URL" என்பதில் கொடுத்து தேடவும். [வேறு மொழியில் ரிசல்ட் வந்தால் அதை Translate செய்வதன் மூலம் பெயரை கண்டுபிடிக்கலாம்]. இப்போதும் தெரியவில்லை என்றால் தவறான பெயரை கொடுத்தால் அடுத்த மிருகத்தின் படம் வரும். 

உங்கள் கணக்கை தொடங்கிய பின், உங்கள் தகவல்களை கொடுத்து, உங்கள் Profile பக்கத்துக்கு வாருங்கள். 

அதில் வலது மேல் மூலையில் உள்ள Streeme >> Referral என்பதை கிளிக் செய்யவும். 


இப்போது வரும் பக்கத்தில், கீழே உள்ளது போல Invitation Code என்று ஒன்று வரும். அதில் உள்ளதை காபி செய்து உங்கள் நண்பர்களுடன் அதை பகிர்ந்து கொண்டால் அவர்கள் இணையும் போது உங்களுக்கும் vShare கிடைக்கும். 

எப்படி ஒருவர் இணைந்துள்ளார் என்பதை அறிவது ?

நீங்கள் Refer செய்யும் நபர் இணையும் போது அவர் நேரடியாக உங்கள் நண்பர் ஆகிவிடுவார். இதன் மூலம் தெரியவரும். 

எப்படியெல்லாம் Refer செய்யலாம்? 

  1. இம்மாதிரி உங்கள் வலைப்பூவில் பதிவு எழுதலாம். 
  2. தனியாக ஈமெயில் அனுப்பலாம். 
  3. ட்விட்டர், பேஸ்புக், கூகுள் பிளஸ் போன்றவற்றில் பகிரலாம்.  

என்ன மேலே உள்ள இணைப்பை கிளிக் செய்து உங்கள் கணக்கை தொடங்கி விட்டீர்களா?

மேலே செய்யாதவர்கள் இங்கே செய்யலாம்.

இந்த இணைப்பில் சென்று Zurker கணக்கை தொடங்குங்கள். [எனது Referral Link ] 



Comments

Popular posts from this blog

மிரட்டல் - விமர்சனம்

Samsung Galaxy S4 full review