உலகின் கவர்ச்சியான பெண் நடிகையாக கத்ரினா கைப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஏக் தா டைகர், தூம்-3 மற்றும் ஷாருகானுடன் பெயரிடப்படாத படங்களில் நடித்து வரும் கத்ரினாவை தெரிவு செய்தவர்கள் பெண்கள் அல்ல, ஆண்களுக்கான முன்னணி இதழ் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பிலிருந்து இவருக்கான வாக்கு அதிகமாக கிடைக்கப்பெற்றதையடுத்து இவர் தெரிவாகியுள்ளார். இந்த கருத்துக்கணிப்பில் போட்டியிட்டவர்கள் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மா மற்றும் ஹொலிவுட் நடிகைகளான மெகன் பாக்ஸ், ஏஞ்சலினா ஜோலி ஆகியோரைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் இவர்.
இதுகுறித்து இவர் கூறியுள்ளதாவது உலகின் மிகவும் கவர்ச்சியான பெண்ணாக தான் மீண்டும் தெரிவாகி இருப்பது குறித்து உண்மையிலேயே பெரிய மகிழ்ச்சி. இதற்காக என்னைத் தெரிவுசெய்த அனைவருக்கும் நன்றி. எனது உடல் அமைப்பைப் பார்த்து மட்டும் மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. கவர்ச்சியாக இருப்பது உடைகளைப் பொறுத்துமட்டுமல்ல. வெறும் ஒரு கொட்டன் சேலையை உடுத்தினாலும் மேக்கப் இல்லாமல் பார்ப்பதற்கு அழகாக, கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Comments
Post a Comment