பில்லா 2 திரை விமர்சனம்


படம் : பில்லா 2
நடிப்பு : அஜித் , பார்வதி ஓமனக்குட்டன் , ப்ருணா அப்துல்லா , ரஹ்மான் , மற்றும் பலர்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம் : சக்ரி டலோடி
தயாரிப்பு : சுரேஷ் பாலாஜி , சுனிர் கேடேர்பால்

பில்லா 2 , மங்காத்தா என்னும் மாபெரும் வெற்றிப்படத்தை தந்த அஜித்தின் அடுத்த படம் , 2007 இல் வெளியாகி சக்கை போடு போட்ட பில்லா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வரும் படம் . உன்னைப்போல் ஒருவன் என்ற வெற்றித் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த சக்ரி டலோடியின் இரண்டாவது படம் . இவ்வாறு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கொண்டு வெளிவந்திருக்கும் பில்லா 2 ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா??? நிச்சயமாக ஆம் என்று கூறலாம்
படத்தின் தொடக்கம் சிறுவன் ஒருவன் “தம்” அடிக்கும் அஜித்தாக மாறும் வரையிலான காட்சிகளை எழுத்து ஓட்டத்துடனேயே காட்டி இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய ஒரு விடையமாகும்.இலங்கையில் அம்மா,அப்பா எல்லோரையும் இழந்து கடைசியில் அக்காவையும் இழந்து அகதி முகாமிற்க்கு வரும் ஒருவராக அஜித் கதையினுள் நுழைகின்றார்…உன் பேர் என்ன என்று கேட்பதில் இருந்து பில்லா..டேவிட் பில்லா…என்று சொல்லுவது வரைக்கும் திரை அரங்கு விசில் சத்தத்தாலும் கூக்குரல்களாலும் நிரம்பி வழிந்தது…!





சக்கரவர்த்தி டொலட்டி”க்கு இதுதான் முதல் படம் என்று சொல்ல வேண்டும்.தனது ஆங்கில பாணியில் ஒரு படத்தை குயாலாக எடுத்து முடித்திருக்கின்றார்.எதுக்கும் பயப்படாமல் வெருமனையே ரத்தமும் சதையும் நிறைந்த ஒரு படத்தை கலக்கலாக எடுத்து விட்டிருக்கின்றார்
படத்தில் பாடல்கள் அனைத்தும் பொருந்த வேண்டிய இடத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கின்றது..குறிப்பாக “மதுரை பொண்ணு…” பாடல் வாலிபர்கள் மனதில் கோடி பட்டாம் பூச்சி…சும்மா தாவணிய தூக்கி தூக்கி ஆடி இருக்காங்க…!(கலக்கலோ கலக்கல் தான்..இந்த பாட்டில எந்த பொண்ண பார்த்தாலும் சூப்பர் ஆக இருக்கு…மச்சீ என்று என் நண்பன் ஷான் சொல்ல கேட்டேன்..!)
படத்தி ஒரு பாடல் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கின்றது.அதுக்கும் புரியாத ஒரு மொழி பாடல்.அதில் வெளி நாட்டு அழகிகள் நடனம் ஆடுவது போல காட்சிகள் அமைக்க பட்டிருக்கும்.எந்த பாடலும் வெறுமனையே பாடலாக இல்லாமல் பாடலுடன் சேர்ந்து கதையும் நகர்வது படத்திற்க்கு இன்னும் ஒரு பிளஸ்..!அஜித்தை மட்டும் நம்பி முற்றும் முழுதாக எடுக்கப்பட்ட படம்..இது என்று சொன்னால் அது மிகையாகாது..!எந்த இடத்தை பார்த்தாலும்,எடுத்துகொண்டாலும் அஜித்தை பின்புலமாக கொண்டே கதைகள் நகர்வது இன்னும் சுவாரஸ்யம்…!
படத்தி இரண்டு கதாநாயகிகள் என்று இருந்தாலும் அவர்கள் எவளோதான் கவர்ச்சி காட்டினாலும் அஜித் மட்டும்தான் கண்ணுக்குள் நிற்கின்றார்..சொல்லப்போனால் இந்த படத்தினை தனி ஒருவராக காவிச்சென்றவர்..என்று சொல்லலாம்..!இப்ப கூட சொல்லணும் போல இருக்கு அடுத்த அடுத்த…..தலதான் என்று…!
படத்தின் எடிட்டர்க்கு பெரிய ஒரு நன்றி சொல்லியே ஆகணும் ஏன்னா இத்தனை கத்திரிக்கோல் போட்டு எந்த காட்சிகளிலும் அது தெரியாதது போல எடிட் செய்து இருக்கிறார்.படத்தின் சுவார்யஸ்திற்க்கும் இவர்தான் பொறுப்பு…தனது கடமையை முழுமையாக செய்து முடித்திருக்கின்றார்.படத்துக்கு மேலும் பலம் சேர்ந்தது இருக்கின்றார்..!
படத்தில் எந்த ஒரு காட்சியும் சலிப்பு தட்டுவது போல இல்லாமல்..அடுத்து என்ன நடக்க போகின்றது என்று தெரியாமல் ரசிகர்களை ஆசனத்தின் நுனிக்கே அடிக்கடி இயக்குநர் அனுப்பி விடுகின்றார்..அவ்வளோ பிரமாதமான திரைக்கதை…படத்தில் பெரிய திருப்பம் “பில்லா தான்தான் இனி எல்லா ஆயுத பிஸ்னஸ் எல்லாவற்றையும் செய்வதாக சொல்லும்” கணத்தில் இருந்து படம் சூடு பிடிக்க தொடங்குகின்றது…இறுதிவரை தனது தனித்துவத்திற்க்காக போராடும் ஒரு தலைவனாக பில்லாவை காட்டி இருப்பது “சக்கரவர்த்தி டொலட்டி”க்கு ஒரு பெரிய வெற்றி…!
பில்லா-II முடியும் இடத்தில் இருந்து பில்லா-2007 தொங்குகின்றது என்பது படத்தின் சளைக்காத கதையின் வடிவமைப்பிற்க்கு கிடைத்த மாபெரும் கரவோசம்..!பில்லா-III இனை குறி வைத்து “சக்கரவர்த்தி டொலட்டி” கதையை நகர்த்தி இருபது தெளிவாக தெரின்கிறது..அந்த படமும் தயாராகும் போலதான் இருக்கு போற போக்கை பார்த்தால்…!
இறுதியில் படம் யுவனின் இனிய குரலுடன் தொடங்கும் “gang gang ganster…” பாடலுடன் முடிவுக்கு வருகின்றது..இறுதியாக எழுத்து ஓட்டத்துடன் அஜித்தின் சாகாசங்கள் காடப்படுகின்றது…!
வழக்கமையான படங்களை போல் அல்லாது வித்தியாசமான ஒரு புதிய முயற்சி ரசிகர்களின் பலத்த எதிர் பார்ப்புக்கு மத்தியில் இருந்த படம்…இப்போது வழமைக்கு மாறாக சாதனைகளின் குமியலாக வலம்வந்துகொண்டிருக்கின்றது…!
பில்லா பாகம் இரண்டு இனி தமிழ் சினிமாவின் ஒரு புதிய தொடக்கம்…நேரம் போறதே தெரியாமல் இருக்கின்றது படத்தின் முக்கிய ஒரு பிளஸ் பாயிண்ட்..
பில்லா 2 – அஜித்தின் கிரீடத்தில் இன்னொரு வைரக்கல்
நன்றி –www.tamilyouthcafe.com

Comments

Popular posts from this blog

மிரட்டல் - விமர்சனம்

Samsung Galaxy S4 full review

Zurker - இணையத்தில் சம்பாதிக்க அழைக்கும் சமூக வலைத்தளம்