ஒன்பதாவது முறையும் ஒத்திவைப்பு : அலுத்துப்போன துப்பாக்கி படக்குழுவினர்(Thuppaki)

விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகிவரும் படத்தின் தலைப்பு துப்பாக்கி என்று பெயர் வைத்த நாள் முதல் கள்ளத்துப்பாக்கி படக்குழுவினரால் சுடப்பட்டுக்கொண்டே இருக்கிறனர் துப்பாக்கி படக்குழுவினர்.

கள்ளத்துப்பாக்கி படக்குழுவினர் துப்பாக்கி என்ற தலைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்ததன் விளைவாக துப்பாக்கி என்ற தலைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட குறித்த வழக்கு ஒன்பதாவது முறையாக மீண்டும் ஒக்டோபர் 3ஆம் திகதியன்று ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மற்றுமொரு முறை துப்பாக்கி படக்குழுவினரின் எதிர்பார்ப்பு சிதறடிக்கப்பட்டது. 

எனவே அலுத்துப்போன துப்பாக்கி படக்குழுவினர் புதிய தலைப்பு குறித்து பரிசீலித்து வருகின்றனர் எனத்தெரிவிக்கப்படுகிறது.

தீபாவளிக்கு படத்தினை வெளியிட எதிர்பார்த்துள்ள படத்தின் தயாரிப்பாளர் தரப்பும் இதற்கு இணங்கியுள்ளதாம். எனவே சரவெடி அல்லது மும்பைத் தமிழன் என்ற இரு பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.




Comments

Popular posts from this blog

புதிய செயற்திறனுடன் முன்னோக்கிச் செல்லும் டொஷிபா

How to install OS X Mountain Lion Hackintosh on PC [Tutorial]

உலகின் மிகப்பெரிய கணனித் தயாரிப்பு நிறுவனம் லெனோவோ: எச்.பியை பின் தள்ளியது