வெளியானது ஐஸ்வர்யா ராய் குழந்தையின் படம்


ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சனை விட தற்போது அதிக பாப்புலாரிட்டியில் உள்ளது அவர்கள் குழந்தை ஆராதயா தான். கடந்த 10 பத்து மாதங்களாக மீடியாவின் கண்களில் காட்டாமலே வைத்துப் பாதுகாத்து வருகின்றனர் அமிதாப் குடும்பத்தினர். சில மும்பைப் பத்திரிக்கைகள் ‘ஆராதயாவின் ஒரு புகைப்படம் எடுத்து வந்தால் உனக்கு பத்து மாசம் சம்பளம் போனஸ்’ என்கிற ரேஞ்சில் தங்களது நிரூபர்களை இதற்கென்றே நேர்ந்து விட்டிருக்கின்றன.
குழந்தையுடன் திருப்பதி தரிசனம் செய்தபோது கூட மும்பை மீடியாக்களினால் ‘க்ளிக்’க முடியாத ஆராதயாவை சமீபத்தில் நியூயார்க்கில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஐஸ்வர்யா ஆராதயாவைத் தூக்கிக் கொண்டு வரும்போது ஒரு புகைப்படக்காரர் சிம்ப்பிளாக ‘க்ளிக்’கி விட்டார்.

கொழுக் மொழுக் என்று தாயைப் போலவே இருக்கும் ஆராதயா அம்மாவின் அதே கண் இமைகளையும் முகச் சாயலில் அம்மா அப்பா இருவரையும் கலந்து வைத்துக் கொண்டு இருக்கிறார்.
இதற்கு முன்பு இந்த அளவு குழந்தையாகப் பிறந்ததிலிருந்தே பரபரப்புக் குள்ளான குழந்தைகள் ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட்டின் இரட்டைக் குழந்தைகள் தான்.
எதிர்காலத்தில் இன்னொரு உலக அழகிப் பட்டம் இந்தியாவுக்குக் கிடைப்பது உறுதி போல் தோன்றுகிறது.

Comments

Popular posts from this blog

புதிய செயற்திறனுடன் முன்னோக்கிச் செல்லும் டொஷிபா

How to install OS X Mountain Lion Hackintosh on PC [Tutorial]

உலகின் மிகப்பெரிய கணனித் தயாரிப்பு நிறுவனம் லெனோவோ: எச்.பியை பின் தள்ளியது