எந்திரன் மற்றும் பில்லா 2 வரிசையில் அடுத்தது மாற்றான் (maatran)
மாற்றான் படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக உள்ளனர். ஒக்டோபர் 12ஆம் திகதி படத்தினை திரையிட திட்டமிட்டுள்ள ஈராஸ் நிறுவனம் வரும் வாரம் முதல் படத்துக்கான புரொமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டவுள்ளனராம்.
மேலும் படத்தினை சுமார் 1300 திரையரங்குகளில் வெளியிடவும் ஏற்பாடுகள் செய்துள்ளது ஈராஸ் நிறுவனம். இந்த திரையரங்க எண்ணிக்கையானது ரஜினியின் எந்திரன் மற்றும் அஜித்தின் பில்லா 2 வுக்கு அடுத்தபடியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை படத்தின் நாயகன் சூர்யா தமிழ் டப்பிங், தெலுங்கு டப்பிங் என தான் சம்பந்தப்பட்ட அனைத்துப் பணிகளையும் முடித்துக் கொடுத்து விட்டு தனது அடுத்த படமான சிங்கம் 2 படப்பிடிப்புக்களில் கலந்துகொள்கிறார்.
Comments
Post a Comment