நான் - விமர்சனம்

நட்சத்திரங்கள் : விஜய் அன்டனி, அனுயா, சித்தார்த் வேணுகோபால், மஞ்சரி
இயக்கம் : ஜீவா சங்கர்
இசை : விஜய் அன்டனி
தயாரிப்பு : முரளி ராமன், பாத்திமா, விஜய் அன்டனி




விஜய் அன்டனி இசையமைக்கும் 25 படம் என்பதுடன் அவரே தயாரிப்பாளராகவும் நாயகனாகவும் அறிமாகியிருக்கும் படமே இந்த நான் திரைப்படம்.

தப்புக்களை எல்லாம் சரியாக செய்தால் தப்பெல்லாம் சரி என்பதுவே 'நான்' படத்தின் ஒரு வரிக்கதை இதற்கு சிறந்த திரைக்கதை அமைத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் ஜீவா சங்கர்.

சிறுவன் கார்த்திக்கின் (விஜய் அன்டனி) அம்மாவும் மாமாவுக்குமிடையிலுள்ள தவறான உறவை பார்த்ததும் அப்பாவிடம் சொல்ல அவர் தற்கொலை செய்துகொள்ளகிறார். பின்னர் கோபத்தில் கார்த்திக் அம்மாவையும் மாமாவையும் வீட்டோடு கொழுத்துவிடுகிறான். இதனால் பொலிஸ் அவனை சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் அடைக்கிறது. 

தண்டனை முடிந்து இளைஞனாகி வெளியே வரும் கார்த்திக் தனது சித்தப்பா வீட்டிற்கு அடைக்கலம் தேட சித்தியோ கொலைகாரன் என கூறி வீட்டை விட்டு வெளியேறச் செய்கிறாள். தொடர்ந்து கார்த்திக் சென்னைக்கு புறப்படுகிறான் வழியில் அவன் பயணிக்கும் பேருந்து விபத்தில் சிக்குகின்றது. இதில் மருத்துவக் கல்லூரியி சேர சென்னை செல்லும் சலீம் என்பவர் இறந்துவிடுகிறார். பின்னர் இறந்த சலீமின் பொருட்களுடன் சென்னைக்கு சலீமாகவே சேர்கிறான் கார்த்திக். அங்கு சந்திக்கும் பிரச்சனைகளும் அதிலிருந்து எப்படி மீள்கிறான் 'நான்' கார்த்திக் என்பதனையும் சொல்வதே மீதிக்கதை.

படத்தின் ஆரம்பக் காட்சிகளிலிருந்தே ரசிகர்களை கட்டிப்போட ஆரம்பிக்கிறது நான். இறுதிவரை படத்தின் கதையை ரசிகர்களுக்கு திருப்தியாக தெளிவான முறையில் திரைக்கதையில் தொய்வில்லாமல் நகர்த்துவது இயக்குனரின் சமர்த்தியம். க்ளைமெக்சிலிலும் இதயங்களை கனக்க வைப்போதோடு ஆச்சரியப்படுத்துகிறார்.

கார்த்திக்காகவும் சலீமாகவும் இசையமைப்பாளர் விஜய் அன்டனி இல்லை நடிகர் விஜய் அன்டனி சிறப்பாகவே பொருந்துகின்றார். சின்ன சின்ன முகபாவனைகளிலும் அசத்துகிறார். விஜய் அன்டனியின் முதல் படம் என்றால் நம்பமுடியவில்லை. கோபம், ஏமாற்றம், அழுகை, சிரிப்பு என ஒவ்வொரு இடத்திலும் அலட்டாமால் நடித்திருக்கிறார். 

விஜய் ஆன்டனிக்கு நண்பனாக வரும் சித்தார்த் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். நாயகி அனுயா சில காட்சிகளில் வந்து போகிறார். ரூபா மஞ்சரி, மக்கஎல பாடலில் இவரது நடனம் எப்பா... ரகத்திலமைந்துள்ளது. 

படத்திற்கு இசை விஜய் ஆன்டனியே என்றாலும் நாயகனாகவே வெற்றிபெற்றிருக்கிறார். தனது 25வது படம் என்பதால் நிறையவே எதிர்பார்ப்புக்கள் இருந்தாலும் கொஞ்கசம் சறுக்கல்தான். மக்கயெல மக்கயெல பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்திற்கு தேவையானதை வழங்கியிருக்கிறார் விஜய் அன்டனி.

ஒளிப்பதிவு படத்தின் இயக்குனர் ஜீவா சங்கரே இயக்குனர் பணியினைப் போல ஒளிப்பதிவிலும் சோடை போகவில்iலை. எடிட்டிங் எஸ். சூர்யா கண்களை உறுத்தாது படம் முழுவதும் பயணிக்கிறது.

மொத்தத்தில் நான், என் முதல் படம் என விஜய் அன்டனி தைரியமாக மார்தட்டிக்கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

The best mobile phones in 2013 to buy Full reviews

How iOS 7 Style Calculator Get On Android App

நடிகை டாப்ஸிக்காக அடிதடி