இப்போதைக்கு திருமணம் இல்லை! நம்புங்க ப்ளீஸ் என்கிறார் த்ரிஷா!!

மாடலிங் துறையில் இருந்து மிஸ் சென்னை பட்டம் பெற்ற பிறகு டைரக்டர் ப்ரியதர்ஷன் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. கமல், விக்ரம், அஜித், விஜய், சூர்யா, சிம்பு என்று கிட்டத்தட்ட அத்தனை பெரிய நட்சத்திரங்களோடு ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் நாகர்ஜூனா, வெங்கடேஷ், மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர்., என்று அங்கும் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து நம்பர்-1 நடிகையாக வலம் வந்தார். அதன்பிறகு புதுமுகங்களின் வரவால் த்ரிஷாவுக்கு கொஞ்சம் சினிமாவில் சறுக்கல் இருந்தாலும், வருஷத்துக்கு மூன்று-நான்கு படங்கள் கொடுத்து கொண்டு தான் இருக்கிறார். பொதுவாக த்ரிஷா என்றாலே அவரைப்பற்றி ஏதாவது ஒரு செய்தி பரபரப்பாக இருக்கும். சமீபகாலமாக அவரைப்பற்றிய பரபரப்பான செய்தி அவரது திருமணத்தை பற்றி தான். தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பாளரான சுரேஷ் காருவின் மகனும், நடிகருமான ராணா டகுபதிக்கும், த்ரிஷாவுக்கும் காதல் என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. இதுபற்றி ...