இணைய இணைப்பின் வேகத்தை அதிகரிக்க.....


இணையத்தை பயன்படுத்தும் பலருக்கும் அதன் வேகம் என்பது பல நேரங்களில் பாடாய் படுத்திவிடும்.அந்நேரங்களில் அதன் வேகத்தை அதிகரிக்க முடியாதா என்று அங்கலாய்த்ததும் உங்களில் பலருக்கும் அனுபவமாய் இருந்திருக்கும். உங்கள் கணனியில் ஒரு சிறிய அமைப்பினை மேற்கொள்வதன் மூலம் அது சாத்தியமாகலாம்.அந்த அமைப்பினை கொடுத்துள்ளேன் முயற்சி செய்து பாருங்கள்..... உங்கள் கணனியின் start ற்கு சென்று Run ஐ சொடுக்கவும். அதில் gpedit.msc என்ற கட்டளை வார்த்தையை இட்டு ok பொத்தானை அழுத்தவும். அப்போது தோன்றும் சாளரத்தின் இடதுபக்கத்தில் உள்ள Administrative Templates -> Network என்பதில் QoS Packet Schedule என்பதன் மேல் சொடுக்கவும். அப்போது சாளரத்தின் வலது பக்கத்தில் தோன்றும் Limit reservable bandwith என்பதை இரட்டை சொடுக்கு செய்யவும். அதன்போது தோன்றும் துணைச்சாளரத்தில் Enabled என்பதை தெரிவு செய்தபின் Bandwith limit(%) என்பதில் காணப்பதும் 20% எனும் வேகத்தின் வீதத்தை 40%,50%,60% என உங்கள் கணனியின் வன்பொருளின் தகவிற்கேற்ப அதிகரித்து Apply செய்து ok பொத்தானை அழுத்தவும்.

இப்பொழுது உங்கள் இணைய இணைப்பின் வேகம் அதிகரித்துள்ளதா என இணையத்தை இயக்கி சோதித்து பாருங்கள். கருத்துக்களை பின்னூட்டமாக இடுங்கள்.

Comments

Popular posts from this blog

The best mobile phones in 2013 to buy Full reviews

How iOS 7 Style Calculator Get On Android App

நடிகை டாப்ஸிக்காக அடிதடி