அங்கதான் புடிச்சோம் ஐடியாவை… தாண்டவம் டீமின் பலே மூவ்!

‘தாண்டவம்’ படத்தில் விக்ரம் பார்வையற்றவராக நடிக்கிறார் என்று எழுத ஆரம்பித்தால் அடிக்க வருவீர்கள். ஏனென்றால் தமிழ் சினிமா ரசிகர்களின் டூத் பிரஷ்-ல் பசை வைக்கப்படுவதற்கு முன்பே வைக்கப்படும் செய்தி இதுவாகதான் இருக்கிறது சமீப நாட்களாக.
‘இதுக்கு இன்ஸ்பிரேஷனை எங்கே பிடிச்சோம். பிடிச்ச இடத்தை அம்பு குறியிட்டுகாட்றோம்’ என்றெல்லாம் பில்டப் கொடுக்கும் விதத்தில் அமெரிக்காவிலிருந்து க்ருஷ் என்பவரை அழைத்து வந்து பிரஸ் முன் நிறுத்தினார்கள். அவரை அறிமுகப்படுத்துவதற்கு முன் தொகுப்பாளினி ரம்யா, விக்ரமை இப்போதுதான் மீசை முளைத்த வாலிபர் என்கிற அளவுக்கு வர்ணிக்க, ‘யப்பா… ரம்யாவுக்கும் கண்ணு தெரியாம போச்சா’ என்ற கமென்ட் வந்தது நிருபர்கள் சைடிலிருந்து. (இணைக்கப்பட்டுள்ள விக்ரமின் தொய்ந்து போன க்ளோஸ் அப் ஸ்டில்லை பார்த்துட்டு சண்டைக்கு வாங்க அவரோட ரசிகர்களே…)




இந்த கதையை தெய்வ திருமகள் சமயத்தில் விக்ரமிடம் சொல்லியிருந்தாராம் விஜய். படத்தில் ஹீரோவுக்கு கண் தெரியாது. ஆனால் வில்லன்களை பந்தாடுகிறார் என்ற அளவுக்கு மட்டுமே இருந்த அந்த ஸ்மால் சைஸ் முட்டையை, இன்று மணக்க மணக்க ஆம்லெட் ஆக்குகிற அளவுக்கு வளர்த்தவர் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவும், முன்னாள் நடிகை ஜெயஸ்ரீயும்தானாம்.
இப்படி ஒரு வரி கதையை சொல்லும்போதே, க்ருஷ் பற்றி விஜய்யிடம் விளக்கிய ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா கையிலிருந்த ஐ பேட்-ல் க்ருஷ் பற்றிய விபரங்களை காட்டியிருக்கிறார். பார்வையற்றவரான க்ருஷ் ‘எக்கோ லொக்கேஷன்’ என்ற உணர்வு திறன் கொண்டவராம். வவ்வால் போல ஒலிகளை வைத்தே இயல்பாக எல்லாவற்றையும் அனுமானித்துவிடுவாராம். இந்த தகவலை கேட்டதோடு சரி… மேற்படி நபரை ரீச் பண்ணாமலிருந்தார் விஜய்.
அந்த நேரத்தில்தான் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட முன்னாள் நடிகை ஜெயஸ்ரீயுடன் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது விஜய்க்கு. அப்போது க்ருஷ் பற்றி இவர் சொல்ல, ‘அவர் என்னோட பிரண்டாச்சே’ என்று ஜெயஸ்ரீ சொல்ல, பழம் நழுவி பாக்கெட்டில் விழுந்தது விஜய்க்கு.
சென்னை வரைக்கும் வந்து விக்ரமுக்கு ட்ரெய்னிங் கொடுத்த விதத்தை விளக்கவும் முடிந்தது க்ருஷ் லீக்கு.

Comments

Popular posts from this blog

Samsung Galaxy S4 full review

ஸ்ரேயா அதிரடி “கவர்ச்சி இல்லாமல் என் படம் இல்லை”

Windows 8.1 Release To Manufacturing (RTM) Finalized, Will Be Available On October 17th